இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானின் இதயம் நொறுக்கப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற மூவர்ண பேரணிக்கு பின்னர் அவர் உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் நோக்கம் தீவிரவாதத்தை அழிப்பதுதான்; அப்பாவிகளை அல்ல என தெரிவித்தார். இந்தியா போரை விரும்பாவிட்டாலும் போருக்கு தயாராக தான் உள்ளதாகவும் கூறினார்.
நமது குழந்தைகளுக்கு தேசியத்தை ஊட்டி வளர்க்க வேண்டும் என்றும், பஹல்காம் தாக்குதல் மூலம் மதக் கலவரத்தை தீவிரவாதிகள் தூண்ட முயன்றனர் என்றும் அவர் தெரிவித்தார். அப்பாவி மக்களை மனதில் வைத்தே பாகிஸ்தானை பிரதமர் மோடி மன்னித்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.