நூர் கான் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் நினைவுச்சின்னத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீப், மே 9-10 அன்று அதிகாலை 2.30 மணியளவில், ராணுவத் தலைவர் அசிம் முனீர் தம்மை அழைத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்துஸ்தானி பாலிஸ்டிக் ஏவுகணைகள் நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பிற பகுதிகளைத் தாக்கியதாக அவர் தெரிவித்தார். ஜெனரலின் குரலில் நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் தேசபக்தி இருந்ததாகவும் அவர் கூறினார்.
நாட்டைக் காப்பாற்ற விமானப்படை உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது என்றும், மேலும் சீன ஜெட் விமானங்களில் நவீன கேஜெட்டுகள் மற்றும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தான் நிராகரித்து வந்த நிலையில், அந்நாட்டு பிரதமரே ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.