பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பிரதமர் பேசிய வரிகளை பயன்படுத்தி விளம்பரம் அளித்த மருத்துவர் ஒருவர் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சிவேந்திர சிங் திவாரி எனும் மருத்துவர், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி கூறிய மேற்கோளை விளம்பரமாக மாற்றியுள்ளார்.
அந்த விளம்பரத்தில், இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்று பிரதமர் மோடி கூறுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், உங்கள் சிறுநீரில் இரத்தத்தைக் கண்டால், உடனடியாக ஒரு சிறுநீரக மருத்துவரை அணுகவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் வைரலான நிலையில், மருத்துவரின் செயலுக்கு பாஜகவினர் உட்படப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.