ஆப்ரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசிதரூர் பெயர் இல்லாத நிலையிலேயே மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது.
இதனையடுத்து தேச நலனுக்காகத் தனது சேவை தேவைப்படும்போது கண்டிப்பாக அதனைச் சிறப்பாகச் செய்வேன் என சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் சசிதரூருக்கு கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசை அவர் பாராட்டிப் பேசி வருகிறார்.
இந்நிலையில் பரிந்துரை பட்டியலில் இல்லாத சசிதரூரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்ததற்குக் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.