குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியக் கொடியைக் கையில் ஏந்திச் சென்றார்.
இதைத்தொடர்ந்து, அகமதாபாத் மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடியின் திட்டங்கள் வாயிலாக ஏழைகளின் வாழ்க்கையில் கூட்டுறவு நிறுவனங்கள் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.