இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சீனா நேரடியாக உதவியது அம்பலமாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது, எதிர்பார்த்ததை விட கூடுதலாக பாகிஸ்தானுக்கு சீனா உதவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் வான் பாதுகாப்புக்கு, சீனாவின் செயற்கைக்கோள் மூலம் உளவுத் தரவுகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய பகுதிகளை கண்காணிக்கும் வகையில் பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்வெளியில் இடம் மாற்றவும், பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ராடார்களை மாற்றி அமைக்கவும் சீனா உதவி புரிந்திருப்பது அம்பலமாகியுள்ளது
மேலும், இந்தியா – பாகிஸ்தான் தாக்குதலின்போது முதல் முறையாக சீனாவின் J-10 C போர் விமானம் மற்றும் PL-15 ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது சீன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பாகிஸ்தான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.