டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு வரும் 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற கோடை கால விடுமுறைக்கு முன்பாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்ற பதிவாளரிடம் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற பதிவாளர், வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.