ஜப்பான் சென்ற எம்பிக்கள் குழு, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தது.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை திரட்ட மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா தலைமையில் 9 பேர் கொண்ட எம்பிக்கள் குழுவினர் முதல்கட்டமாக ஜப்பான் புறப்பட்டனர். டோக்கியோ சென்றடைந்த அவர்களுக்கு இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, டோக்கியோவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு எம்பிக்கள் குழுவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் குமார் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தது. அப்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்தும், பங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.