டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனைக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து. இதையடுத்து, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதன் விசாரணையில் தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒட்டுமொத்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து ஆணையிட்டனர்.
மேலும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலக்கத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டனர்.