சீனாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ள பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு அவர் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணம் இதுவாகும். சீனாவுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடு நெதர்லாந்து ஆகும்.
அதே சமயம், இந்தியா – நெதர்லாந்து இடையே சுமார் 22 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கினால், துருக்கியை போன்று நெதர்லாந்து மீதும் இந்தியா பொருளாதார நடவடிக்கைகள் எடுக்க தயங்காது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்காக இந்தியாவுடன் உள்ள வர்த்தக உறவுக்கு பாதிப்பு ஏற்படுவதை நெதர்லாந்தும் விரும்பாது என புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.