கேரளாவில் ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற பெயரில் இருந்த பிரதான சாலை சந்திப்பின் பெயரை மாற்ற பஞ்சாயத்துக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
கொல்லத்தில் உள்ள குன்னத்தூர் கிராம பஞ்சாயத்தின் நிலக்கல் வார்டில், பிரதான சாலை சந்திப்பின் பெயர் ‘பாகிஸ்தான் முக்கு’ என வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதலை தொடர்ந்து இந்த சாலை சந்திப்பின் பெயரை மாற்ற பாஜக வார்டு உறுப்பினர் கோரிக்கை முன்வைத்தார். அது அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக ஏற்கப்பட்ட நிலையில், அந்த பெயரை ‘இவருகலா’ என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.