தமிழகத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரக்கோணம் வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐ க்கு ஒப்படைக்க வேண்டும் என வலியறுத்தினார்.
தமிழகத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என்றும், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் தமிழகம் இருமடங்கு வளர்ச்சி அடைந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் காவி கொடி பறக்கும் என்றும், திமுக அரசு தமிழகத்தின் வளர்ச்சியை விட தம்பிகளின் வளர்ச்சியை தான் கருத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தம்பிகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முடிவு கட்டும் என்றும். எல்.முருகன் தெரிவித்தார்.