திமுக என்ற ஊழல் பெருச்சாளியை வீட்டுக்கு அனுப்பவே பாஜக கூட்டணி அமைந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தம்பிகள் ஆட்சியும், சார்களின் ஆட்சியும் தான் நடப்பதாக தெரிவித்தார். அரக்கோணத்தில் சகோதரிக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
4 ஆண்டுகளாக மக்களின் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்றும், அரசியலுக்காக மட்டுமே நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றதாகவும் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைபெறுகிறதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறதா என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.