கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கியில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை நகரில் உள்ள வணிக வளாகத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது.
நல்வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாததால் உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு கருதி வணிக வளாகத்திலிருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மழையின் காரணமாக மண்ணில் அழுத்தம் ஏற்பட்டு சுவர் இடிந்து விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.