புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பிராந்தி, விஸ்கி, ஒய்ன் உள்ளிட்ட மதுபானங்களின் விலை லிட்டருக்கு 50 ரூபாய் முதல் 325 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பீர் வகை மதுபானங்கள் 30 ரூபாய் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகக் கலால் துறை தெரிவித்துள்ளது.