லாட்வியாவின் ரிகாவில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருடன் திமுக எம்பி கனிமொழி உரையாடினார்.
அப்போது பேசிய கனிமொழி, பஹல்காமில் 26 அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகள், இதனை உங்கள் பிரதமரிடம் சொல்லுங்கள் எனத் தெரிவித்ததாகக் கூறினார்.
தங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவைப் பிரிக்கத் தீவிரவாதிகள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடியபோது, எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது என்பது மிகத் தெளிவானதாகவும் கனிமொழி குறிப்பிட்டார்.