அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR எதற்காக Ruled-out செய்யப்பட்டான்? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை ஸ்டாலின் மாடல் திமுக அரசு செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இவை அத்தனையும் முறியடித்து, திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு நீதிமன்றம் தண்டனையைச் சாத்தியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR எதற்காக Ruled-out செய்யப்பட்டான்? எனக் கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி அமைத்ததும், ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
















