கேரளாவில் உள்ள அங்கன்வாடிகளில் இனி வாரம் ஒரு முறை முட்டை பிரியாணி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சங்கு என்ற மூன்று வயது சிறுவன், அங்கன்வாடியில் உப்புமா போடப்படுவதாகவும், பிரியாணி தந்ததால்தான் அங்கன்வாடிக்கு வருவேன் எனவும் தெரிவித்தான்.
அந்த வீடியோ வைரலான நிலையில், சிறுவனின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனக் கேரள அரசு தெரிவித்தது.
அதன்படி அங்கன்வாடியில் இனி வாரத்திற்கு ஒருமுறை முட்டை பிரியாணி வழங்கப்படும் என்றும், வாரத்தில் 2 நாட்கள் வழங்கப்பட்டு வந்த பால், முட்டை இனி 3 நாட்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.