ட்ரம்ப் Vs மஸ்க் - முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு - வீதிக்கு வந்த சண்டை!
Jul 23, 2025, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Web Desk by Web Desk
Jun 7, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நம்ப முடியாதது என்று கூறப்பட்ட ட்ரம்ப் எலான் மஸ்க் நட்பு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. இருவருக்கும் இடையேயான மோதல் அம்பலத்துக்கு வந்துள்ளது. மஸ்க் ஒரு பைத்தியம் என்று ட்ரம்பும், ட்ரம்ப் நன்றி கெட்டவர் என்று மஸ்க்கும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர் மஸ்க்- உலகின் மிக அதிக சக்தி வாய்ந்த நபர் ட்ரம்ப் இருவருக்குமான உறவு 10 மாதங்களில் முடிவுக்கு வந்தது எப்படி ? இந்த பிரிவுக்குப் பின்னணி என்ன ? அடுத்து என்ன நடக்கும் ?  என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில், ட்ரம்புக்கு ஆதரவாக களம் இறங்கிய எலான் மஸ்க், இரண்டாவது முறையாக ட்ரம்பை அதிபராக்க, சுமார் 250 மில்லியன் டாலருக்கும் மேல்  செலவழித்தார். தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்ட எலான் மஸ்க், அமெரிக்கா அரசின் இரண்டு ட்ரில்லியன் டாலர் அளவுக்குத் தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதாக உறுதியளித்தார்.

அமெரிக்காவின் 47 வது அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், அரசின் செலவுகளைக் குறைப்பதற்காக, எலான் மஸ்க் தலைமையில், அரசு செயல் திறன் துறை  உருவாக்கப் பட்டது. குறைக்கப்படும் அரசு செலவுகளின் இலக்கு  மஸ்க்கால் ஒரு  ட்ரில்லியன் டாலர் என்று  நிர்ணயிக்கப்பட்டது. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது உள்ளிட்ட பல ஆலோசனைகளை இத்துறை வழங்கியது. வெள்ளை மாளிகையின் நிர்வாக முடிவுகளில் எலான் மஸ்க்கின் தலையீடு அதிகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

வெள்ளை மாளிகையின் புல்வெளியில் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் கண்காட்சியை நடத்திய ட்ரம்ப், டெஸ்லா காரை தான் வாங்கி இருப்பதாகக் கூறி டெஸ்லா பிராண்ட்டுக்கு விளம்பர தூதராகவே மாறினார். இந்தச் சூழலில், எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக,புதிய வரி மற்றும் சலுகை மசோதா தயார் செய்யப்பட்டது. அதில் ஏராளமான வரி சலுகைகளும் அதிகமான  இராணுவச் செலவுகளும் இருந்தது.இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப் பட்டது. பன்றி இறைச்சி நிறைந்த மசோதா என்று எதிர்ப்பு தெரிவித்த மஸ்க், அரசு நிர்வாகத்திலிருந்து  விலகினார்.

ஏமாற்றம் அளித்துள்ள அமெரிக்க பட்ஜெட், நிதி பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும் அதன் விளைவாகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று  விமர்சனம் செய்த எலான் மஸ்க், தனது எக்ஸ் தளத்தில், தொடர் பதிவுகள் வெளியிட்டு ட்ரம்பின் புதிய வரி மசோதாவைக்  கடுமையாகத் தாக்கி வந்தார்.

எலான் மஸ்க்குடன் சிறந்த நட்பு இருந்ததாகவும்,இனியும் அப்படி இருக்குமா என்று தெரியவில்லை என்று கூறிய ட்ரம்ப், மஸ்க் மீது தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், புதிய மசோதாவில் உள்ள அம்சங்கள் அனைத்தும் எலான் மஸ்க்குக்கு நன்றாகவே தெரியும் என்றும், தற்போது அவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்று ட்ரம்ப் கூறினார்.

இதனையடுத்து, தனது சமூக ஊடகத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவின் நிதி மசோதாவில், பில்லியன் கணக்கான டாலர்களைச் சேமிக்கும் எளிதான வழி, எலான் மஸ்க் நிறுவனத்துக்கு அரசு கொடுக்கும் மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.  அதனால் ஆத்திரமடைந்த எலான்  மஸ்க் . தான் இல்லை என்றால் ட்ரம்ப் அதிபர் தேர்தலில் தோற்றிருப்பார் என்றும், நன்றி கெட்டவர் ட்ரம்ப் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், தனது  நிறுவனத்தின் ஒப்பந்தத்தை அரசு நிறுத்தினால், ட்ராகன் விண்கலம் பணிகள் நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

ட்ரம்பை நீக்கி விட்டு துணை அதிபரை ஜேடிவான்ஸை அதிபராக்க வேண்டுமா ? என்ற கேள்விக்கு ஆமாம் என்று பதிலளித்துள்ள எலான் மஸ்க்,அமெரிக்காவில் புதிய கட்சி தொடங்கப் பட வேண்டுமா என்று தனது எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.  மேலும், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன்  ட்ரம்பு தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள  எலான் மஸ்க் எப்ஸ்டீன்  ஃபைல்ஸில்  ட்ரம்பின் பெயரும் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ட்ரம்ப் பற்றி குறித்து எப்ஸ்டீன் ஃபைல்ஸில் எந்த தகவலும் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ள  ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கறிஞர், பொய் சொன்னதற்காக எலான் மஸ்க் பகிரங்கமாக அதிபரிடம்  மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய போது, வெள்ளை மாளிகை சின்னம் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய தங்கச் சாவியை மஸ்க்குக்கு பரிசளித்த ட்ரம்ப், தனக்கு எதிராக எலான் மஸ்க் திரும்பி இருப்பதைப்   பொருட்படுத்தப் போவதில்லை என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே டெஸ்லாவின் பங்கு 14 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. யாரோடும் சண்டை போட்டுக் கொள்ள நேர்ந்தாலும் பிறகு சமரசமாகப் போவது ட்ரம்பின் பழக்கம். ஆனால் இந்தமுறை சமரசத்துக்கு ட்ரம்பும், எலான் மஸ்க்கும் தயாராக இல்லை என்றே தெரிகிறது.  ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும், ட்ரம்பை விலைக்கு வாங்க முடியாது என்பதற்கு  எலான் மஸ்க்  சான்றாக உள்ளார்.

Tags: elonmuskusadonald trump 2025Elon Musk's TeslaTrump Vs Musk - A Complete Showdown: A Friendship That Ended in Bitterness - A Fight That Came to the Streets
ShareTweetSendShare
Previous Post

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

Next Post

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து – உளுந்தூர்பேட்டை பணிமனையில் பரபரப்பு!

இன்றைய தங்கம் விலை!

புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரி – வைரல் வீடியோ!

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies