விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!
Jan 18, 2026, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

Murugesan M by Murugesan M
Jun 25, 2025, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷி சுக்லா. சிறு வயதிலிருந்தே விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற சுக்லாவின் கனவை நினைவாக்குவதோடு  இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மைல்கல்லாகவும் அமைந்திருக்கும் இப்பயணம் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்களை மட்டுமல்ல கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கையையும், கனவுகளையும் சுமந்து செல்கிறேன்…. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டுவதற்கு உறுதுணையான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக சுபன்ஷி சுக்லா சொன்ன வார்த்தைகள் தான் இவை. சர்வதேச விண்வெளி மையத்திற்கு இதுவரை 270 பேர் சென்றிருந்தாலும் அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லையே என்ற ஏக்கத்தையும், கவலைகளையும் போக்கும் வகையில் அமைந்திருக்கிறது சுபன்ஷி சுக்லாவின் இந்த விண்வெளிப் பயணம்

விண்வெளி ஆய்வுகளுக்காகப் பல ஆண்டுகளாகச் சர்வதேச விண்வெளி மையத்தைப் பயன்படுத்தி வரும் நாசா, 2030 ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு ஆக்ஸியம் எனும் மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆக்ஸியம்ம் திட்டத்திற்காக ஏற்கனவே மூன்று கட்டமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது 4 வது திட்டத்தின் கீழ் இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லும் முதல் இந்தியரான சுபன்ஷி சுக்லா, உத்தரப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் ஆவார். இந்திய விமானப்படையின் விமானியாகவும், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்திலும் சுபன்ஷி சுக்லா பணியாற்றி வருகிறார். விமானத்தை இயக்குவதில் சுமார் 2 ஆயிரம் மணி நேரம் அனுபவம் பெற்றிருக்கும் சுக்லா, 2019 ஆம் ஆண்டு விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்றதோடு,  விண்வெளி மருத்துவ நிறுவனத்தின் விண்வெளி வீரர் தேர்வு செயல்முறைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின்  ககன்யான் பணிக்குத் தேர்வான நால்வரில் ஒருவரான சுக்லா 2021 ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள காகரின் விண்வெளி பயிற்சி மையத்தில் அடிப்படை பயிற்சியையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார். சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லும் விண்கலத்தின் செயல்பாடுகளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் விமானியாக மட்டுமல்லாமல், விண்ணில் ஏவப்படுவது முதல் மீண்டும் பூமிக்குத் திரும்பும் வரை அனைத்து செயல்பாடுகளிலும் சுபன்ஷி சுக்லாவின் பங்கு இன்றியமையாததாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த விண்வெளிப் பயணத்திற்கு நான்கு வீரர்கள்  தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஐந்தாவது உறுப்பினராக ஜாய் என்ற சிறிய அன்னப் பறவை பொம்மையும் இணைந்திருக்கிறது. புவி ஈர்ப்பு விசையை தாண்டி வெளியே செல்லும் போது இந்த ஜாய் பொம்மை தான் ஒரு குறிப்பானாகவும் செயல்பட உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குழுவினர்கள் இந்திய உணவு வகைகளைச் சுவைப்பதற்காக கேரட் அல்வா, பாசிப்பருப்பு அல்வா மற்றும் மாம்பழ ஜூஸ் ஆகிய இனிப்பு வகைகளையும் தன் பயணத்தின் போது சுக்லா எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பிரதிநிதியாக விண்ணுக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என பல்வேறு பெருமைகளைப் பெற்றாலும் அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதே ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையளிக்க கூடியதாக அமைந்திருக்கிறது.

சுக்லாவின் இந்த விண்வெளிப் பயணம், விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற அவரின் சிறுவயது கனவை நனவாக்கியதோடு, இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல்கல்லாகவும் அமைந்திருக்கிறது.

Tags: விண்வெளிthe spaceசுபன்ஷி சுக்லாSpace Hero Shubhanshu Shukla
ShareTweetSendShare
Previous Post

திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை – போலீஸ் விசாரணை!

Next Post

முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் டாஸ்மாக் வியாபாரம் மந்தம்!

Related News

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

பாகிஸ்தான் வேஸ்ட்..! இந்தியா தான் பெஸ்ட்..! – குடியரசு கட்சி எம்பி ரிச் மெக்கார்மிக்

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies