நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?
Sep 17, 2025, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

Web Desk by Web Desk
Jun 13, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிலமணி நொடிகளிலேயே கீழே விழுந்து நொறுங்கித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.  நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த பயங்கர விமான விபத்துக்கான காரணம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த வியாழக் கிழமை, அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல்  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம், லண்டனுக்குக் கிளம்பியது.

கிளப்பிய வேகத்தில் அருகில் இருந்த மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

AI-171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து வானில் ஏறுகிறது. பிறகு குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலே தாழ்வாகப் பறந்த விமானம் சில நொடிகளிலேயே அதிவேகமாக கீழே  இறங்குகிறது. மரங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்களுக்குப் பின் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போகிறது  ஏர் இந்தியா விமானம். அதன்பின்னர்,அதிக சத்தத்துடன் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிகிறது.   ஒரு பெரிய கருப்பு புகை மூட்டத்தை வீடியோக்கள் காட்டுகின்றன.

625 அடி உயரத்தை எட்டியபோது விமானத்திலிருந்து கடைசி சிக்னல்  கிடைத்ததாகவும், பின்னர்  நிமிடத்துக்கு 475 அடி செங்குத்து வேகத்தில் கீழே விழுந்து நொறுங்கியதாகவும் விமான ரேடார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரலான வீடியோவில் விமானம் காற்றில் மிதக்கப் போராடுவதைக் காட்டுகிறது. இது விமானத்தின்  இரண்டு  எஞ்சின்களும் செயலிழந்து போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

புறப்பட்ட உடனேயே அகமதாபாத் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு MAY DAY அபாய அழைப்பு வந்துள்ளது. அதன்பின்,ஏர் இந்தியா விமானத்திலிருந்து எந்த பதிலும் இல்லை என்று இந்திய விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

வழக்கமாகப் பறவை மோதுவதும் விமானம் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கும். இரட்டை இயந்திர செயலிழப்புக்கான காரணம், பறவை மோதுவதுதான் என்றும் கூறப்படுகிறது.

விமானம் புறப்படும்போது அதன் இறக்கை மடிப்புகள் (Airplane wing flaps) ஒரு சிக்கலான நிலையில் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ள சில விமான நிபுணர்கள், மடிப்புகள் இறக்கையுடன் ஒன்றிப்போன நிலையிலிருந்துள்ளதை வீடியோவில் காணமுடிகிறது என்றும் விமானம் புறப்பட்ட உடனேயே இப்படி இருப்பது  அரிதானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிரீம்லைனர் விமானம், ஆறு வாரங்களுக்கு முன்புதான்  ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று சாதனை படைத்துள்ளது என்று கூறப்பட்டது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப் பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஆய்வுக்குப் பிறகு கறுப்புப் பெட்டியில் பதிவான தகவல்களைப் பெறக் குறைந்தது 15 நாட்கள் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  அதன் பிறகே விபத்துக்கான உண்மையான காரணம்  தெரியவரும்.

Tags: gujaratகுஜராத்அகமதாபாத் விமான விபத்துThe plane crash that shook the country: Was the twin engine failure the cause?AI-171 போயிங் 787-8
ShareTweetSendShare
Previous Post

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Next Post

அதிகார வெறியில் யூனுஸ் : தேர்தலை ஒத்தி வைக்க சதி – வெடிக்கும் போராட்டம்!

Related News

ஆந்திரா : டிப்பர் லாரி – கார் மோதி கோர விபத்து -7 பேர் பலி!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

ஆந்திரா : மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிய எலான் மஸ்க் – பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம்!

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

பிரதமர் மோடிக்கு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து!

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை

சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!

மதுரை : கேட்டரிங் செய்ததற்கான பணத்தை கொடுக்காமல் திமுக நிர்வாகி மிரட்டல்!

ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல்!

புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியல் : முதல் 10 இடத்திற்குள் நுழைந்து சீனா சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies