அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்குக் கூடுதலாக தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், விமான விபத்தில் பயணிகள் உயிரிழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தோருக்குக் கூடுதலாக தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடாக வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முனைப்புடன் இருப்பதாகவும் டாடா குழுமம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1 கோடி ரூபாய் நிவாரண நிதியுடன் கூடுதலாக தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிதியாக வழங்கப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.