நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் நாய்கள் கண்காட்சி தொடங்கியது.
குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மைதானத்தில் நீலகிரி கென்னல் சங்கம் சார்பில் 6வது நாய்கள் கண்காட்சி தொடங்கி உள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. மேலும் உள்நாட்டு வகையான ராஜபாளையம், கோம்பை, காரவன்ஹவுண்ட், வெளிநாட்டு வகையான டாபர்மேன், பீகிள், பிரேசிலியன், மஸ்தீப் உள்பட 45 ரகங்களில் 250 நாய்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.