விழுப்புரத்தில் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்துத் தப்பிச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் ரெட்டியார் மில், மகாத்மா காந்தி சாலை, மாம்பழப்பட்டு சாலை பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் பகுதியில் அலுமினிய தகடு வைத்து நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் பெங்களுரூவில் இருந்து வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல முயன்றனர்.
அவர்களைக் கைது செய்த போலீசார் 10 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கம், 4 செல்போன்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.