இஸ்ரேல் - ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா? - சிறப்பு தொகுப்பு!
Aug 30, 2025, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jun 18, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் பேரலுக்கு 6 டாலர் அதிகரித்து 78 டாலராக உயர்ந்துள்ளது.  அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

வடக்கே ஈரான், தெற்கே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என அமைந்துள்ள ஹோர்முஸ் ஜலசந்தி, வளைகுடாவை அரேபியக் கடலுடன் இணைக்கிறது.

உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றாக விளங்குகிறது ஹோர்முஸ் ஜலசந்தி.  உலகளவில் விநியோகிக்கப்படும் எண்ணெய்யில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகத் தான் செல்கிறது. அதாவது கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தில் 20 சதவீதம் ஈரானுக்கு வடக்கே உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது. எந்த நேரத்திலும், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த ஜலசந்தி வழியாக ஒரு நாளைக்குப் பல டேங்கர் கப்பல்கள் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கும்.

இதற்கிடையே, இஸ்ரேல் ஈரான் தீவிர போர் காரணமாகக் கப்பல் சரக்கு போக்குவரத்து தடைப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் உள் கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், ஒரு நாளைக்குப் பல மில்லியன் கணக்கான பீப்பாய் அளவில் நடைபெறும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டது.

ஈரானின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தளங்களை இஸ்ரேல் தாக்கினால், (Brent Crude Oil) பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 100 டாலர் வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஒரு நாளைக்கு ஈரானில் இருந்து 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஆகிறது. இந்நிலையில், ஈரானின் புஷேர் மாகாணம் கண்கணில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஈரானின் எண்ணெய் உற்பத்தி கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.  உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

OPEC+ ஓபெக் எனப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி கூட்டமைப்பு நாடுகள், ஜூலை மாதம் எதிர்பார்த்ததை விட அதிகமான உற்பத்தியை அறிவித்திருப்பதால், ஓரளவுக்குக்  கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கும் என்று வணிக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஈரானிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யவில்லை. ஆனாலும் நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. ஈராக்,சவூதி அரேபியா,மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வந்து சேர்வதில் தாமதம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலில் மாணவர்கள் உட்பட 20,000 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 85,000 யூதர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2025  மார்ச் 10ஆம் தேதி  நிலவரப்படி, 6,694 இந்தியத் தொழிலாளர்கள் அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலை அடைந்துள்ளனர். மேலும்,   தற்போது சுமார் 10,765 இந்தியர்கள் ஈரானில் வசிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில், அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும்,  தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும்,  ஈரானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஈரானுடன் இந்தியா குறிப்பிடத்தக்க வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. இரு நாடுகளுடனான வர்த்தகம் மொத்தம் 5 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் ஈரான் போர் தொடரும் நிலையில், இந்த வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Isarael attackஇஸ்ரேல் - ஈரான் போர்Israel-Iran war: Will it affect India?இந்தியாவுக்கு பாதிப்பா
ShareTweetSendShare
Previous Post

சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

Next Post

ஈரானில் இருந்து டெல்லி திரும்பிய மாணவர்கள் – மத்திய அரசுக்கு நன்றி!

Related News

நீரில் மூழ்கிய பத்ரிநாத் நெடுஞ்சாலை!

ட்ரம்ப் விதித்துள்ள பெரும்பாலான வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமா? : பாக். அரசு குற்றச்சாட்டை நம்ப மறுத்த சொந்த நாட்டு மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

DUDE படத்தின் ஊரும் பிளட் வீடியோ பாடல் வைரல்!

விநாயகர் சிலைகள் முல்லைப் பெரியாறு ஆற்றில் கரைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் : நிர்மலா சீதாராமன்

முஸ்லிம் ஆதரவு கொள்கையை திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தாதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மறைந்த ஆளுநர் இல.கணேசனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிர்மலா சீதாராமன் – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மூப்பனார் நினைவு தினம் – நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன் மரியாதை!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தியது காவல்துறை தான் – அண்ணாமலை

விழாக்கோலம் பூண்ட மதுரை : 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலம்!

சிவகங்கையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக முன்னாள் நிர்வாகிக்கு 12 ஆண்டுகள் சிறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies