திண்டுக்கல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - இந்து முன்னணி நிர்வாகிகளிடையே கைகலப்பு!
Nov 15, 2025, 05:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – இந்து முன்னணி நிர்வாகிகளிடையே கைகலப்பு!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம், ஒன்றிய செயலாளர் சரத் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒன்றிய செயலாளர் சரத், இந்து முன்னணி அமைப்பு பொறுப்பாளர்களான வினோத் உள்ளிட்டோரை ஒருமையில் பேசி விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத் உள்ளிட்டோர், தங்களைத் தரக்குறைவாகப் பேசியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியது. இதில் காயமடைந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத், சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலையத்திலும் இரு தரப்பினரிடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலர், திண்டுக்கல் – கரூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்குப் போட்டியாக இந்து முன்னணி மற்றும் பாஜக-வைச் சேர்ந்தவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டு அக்கட்சியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் மீண்டும் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவர், பாஜக மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகனைத் தடியால் அடித்துள்ளார். இதில் பாலமுருகனின் மண்டை உடைந்து ரத்த வடிந்த நிலையில், அவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மற்றும் பாஜக-வை சேர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதனால் கலவரத்தைக் கட்டுப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் பாஜக அமைப்பைச் சேர்ந்தவர்களையும் போலீசார் அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பதற்றமான சூழலும் நிலவியது.

Tags: திண்டுக்கல்Clashes between Marxist Communist and Hindu Front executivesகைகலப்பு
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான் : துணை பிரதமர் இஷாக் தார் வாக்குமூலம்!

Next Post

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது : தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Related News

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies