ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமா என்று பாகிஸ்தானுக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.
தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவரின் பெயரைப் பரிந்துரை செய்வதாகப் பாகிஸ்தான் அறிவித்தது. இதற்கிடையில் ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்கியது.
இதுகுறித்து அசாதுதீன் ஓவைசியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஓவைசி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு, வரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமா? என்று பாகிஸ்தானியர்களிடம் நாம் கேட்க வேண்டும் என்று கூறினார்.