ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!
Aug 14, 2025, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும், சீனாவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வழங்கியுள்ள நிலையில், இந்தியாவும் விமானப்படையை நவீனமயமாக்கி வருகிறது.  அடுத்த மார்ச் மாதத்துக்குள் ஆறு தேஜஸ் MK 1A இலகுரக போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த  போர் விமானம் பற்றிய  ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தான் விமானப்படையின் முதுகெலும்பாக அமெரிக்காவின் F-16 போர் விமானம் உள்ளது. F-16 ஒரு வலுவான போர் விமானமாக இருந்தாலும், பாகிஸ்தானின் F-16 போர் விமானங்களில் பல பழைய மாடலாக உள்ளன. சீனாவும்  பாகிஸ்தானுக்கு ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கத் தயாராகி வருகிறது.

அமெரிக்காவின் F-35, ரஷ்யாவின் Su-57E போன்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வாங்குவது குறித்து இந்தியா ஆராய்ந்து வரும் நிலையில்,  HAL மற்றும் DRDO உடன் இணைந்து முழுவதும்  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானத்தைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக, தேஜஸ் போர் விமானங்களை இந்தியா உருவாக்கியுள்ளது.

தேஜஸ்- இது அச்சுறுத்தல் மிக்க எத்தகைய வான் சூழல்களிலும் இயங்கும் திறன் கொண்ட ஒற்றை எஞ்சின் கொண்ட பல பணிகளை மேற்கொள்ளக்கூடிய போர் விமானமாகும். இது வான் பாதுகாப்பு, கடல்சார் உளவு மற்றும் துல்லிய தாக்குதல் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்  உருவாக்கிய தேஜஸ் Mk1, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் அதிநவீன போர் விமானமாகும். 2015-ம் ஆண்டு முதல் தேஜஸ் MK1 போர் விமானம், இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டில், 48,000 கோடி ரூபாய்க்கு 83 Mk-1A போர் விமானங்களுக்காக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு,  சுமார் 67,000 கோடி ரூபாய்க்கு கூடுதலாக 97  Mk-1A விமானங்களை வாங்கவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டது. இது மட்டுமில்லாமல், மேம்பட்ட மல்டி-ரோல் தேஜஸ் Mk-2 போர் விமானக் கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவதுக்கும் 156 இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பு 1.3 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

இந்த தேஜஸ் போர் விமான உற்பத்தியில் சுமார் 2,448 சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 6,300-க்கும் மேற்பட்ட இந்திய மூலப்பொருள் விற்பனையாளர்களுடன் இணைந்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இந்தப்பணியில் ஈடுபட்டுள்ளது.

தேஜஸ் MK1A,  4.5 தலைமுறை பல்துறை போர் விமானமாகும். இதில், அதிநவீன Avionics,  மின்னணு போர் விமான தொகுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் Active Electronically Scanned Array radar, அமைப்பைக் கொண்டுள்ளது. இது சிறந்த கண்காணிப்பு மற்றும் துல்லிய தாக்கும் திறனை வழங்குகிறது. இந்த போர் விமானத்தின் வேகம் மணிக்கு 2,222 கிலோமீட்டர் ஆகும்.

தேஜஸ் MK1A  வானிலிருந்து வானுக்கும், வானில் இருந்து தரைக்கும் செலுத்தக் கூடிய அதிநவீன ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.  Beyond Visual Range (BVR)  ஏவுகணைகள் முதல் பிரம்மோஸ் வரை பல்வேறு ஏவுகணைகளையும் ஏந்தி செல்லும் வகையில் இந்த போர் விமானம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான GE Aerospace நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட F404-IN20 எஞ்சின் தேஜஸ் MK1A போர் விமானத்தில் பயன்படுத்துகிறது. அடுத்த மாதம் சோதனை நடத்தப்பட்டு வரும் டிசம்பருக்குள் இந்திய விமானப்படைக்கு 12 தேஜஸ் MK1A  போர் விமானங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் இரண்டு மற்றும் நாசிக்கில் ஒன்று என மூன்று பிரத்யேக உற்பத்தி ஆலைகள் மூலம், ஆண்டுதோறும் 24 தேஜஸ் போர் விமானங்கள் தயாரிக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 2031ம் ஆண்டுக்குள் 180 தேஜஸ் Mk-1A போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரான்ஸின் ரஃபேல் மற்றும் அமெரிக்காவின் F-16 போர் விமானங்களை விட, இந்தியாவின் உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் MK1A போர் விமானம் ஒரு சரியான மாற்று என்று சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தேஜஸ் விமானங்களில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான வசதி உள்ளது. அதே நேரத்தில் ரஃபேல் மற்றும் F-16 போர் விமானங்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags: More capable than Rafale: Tejas MK1A to be inducted into the Air Forceidian armyதேஜாஸ் MK1APM ModiIndia
ShareTweetSendShare
Previous Post

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

Next Post

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies