கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதிய மின்சார பேருந்து தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
திருச்சியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார பேருந்து, சென்னியாண்டவர் கோயில் அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது. அப்போது திடீரென பேட்டரியில் இருந்து கரும்புகை வெளியேறி தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் துரிதமாக செயல்பட்டு, பேருந்தில் இருந்த 18 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும் மின்சாரப் பேருந்து முழுவதும் தீயில் கருகி சேதமடைந்தது.