இத்தாலியில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பாயா டோமிசியா நகரை ஒட்டிய வனப் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து இந்த காட்டுத் தீயானது மளமளவென பரவத் தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
தொடர்ந்து அங்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















