திமுகவினரின் குற்ற செயல்கள் மூடி மறைக்கப்படுவதாகவும், தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாகி விட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களின் மானம் ஏழைகளின் உயிர் தமிழகத்தில் மலிவாகி போய்விட்டதாக தெரிவித்தார்.
பாஜக எந்த கட்சியையும் கபளீகரம் செய்யவில்லை என்றும், திமுக தான் தன்னுடன் இருக்கும் கட்சிகளை கபினீகரம் செய்வதாக சாடினார்.
அதிமுக பாஜக கூட்டணியில் ஏதாவது நடக்குமா என திமுகவின்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் என அவர் கூறினார்,
எதிர் கூட்டணியில் யார் முதல்வர் என கேட்பதாகவும், அவர்கள் கூட்டணியில் ஒரு தலித் முதல்வராக வரவேண்டும் என ஏன் திருமாவளவனால் கோரிக்கை கூட வைக்க முடியவில்லை என்றும் தமிழிசை கூறினார்.