மதுரையில் சம்பள உயர்வு மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டு பகுதிகளில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி மைய கட்டிட அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 மண்டலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தூய்மைப்பணியாளர்கள் மதுரை மாநகராட்சி மைய அலுவலக வாயில் முன் தரையில் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.