சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்புவனம் அருகே அஜித்குமார் என்பவரை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவரது உறவினர்களைத் தொடர்பு கொண்ட போலீசார் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வீடியோ ஆதாரம் நீதிபதிகளிடம் சமர்பிக்கப்பட்டது. அந்த வீடியோவில் விசாரணை எனக்கூறி அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமாரை போலீசார் மாறி மாறி தாக்குவதும் , அஜித்குமார் வலியால் துடிப்பதும் பதிவாகி உள்ளது.