கானாவின் முதல் அதிபர் குவாமே நக்ருமா நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
அரசுமுறை பயணமாகக் கானா நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் முதல் அதிபர் குவாமே நக்ருமா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின் நினைவு பூங்காவையும் நேரில் பார்வையிட்டார். கானா துணை அதிபர் நானா ஜேன் மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.