மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மராத்தி பேசாததற்காகக் கடை உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு, அம்மாநில அமைச்சர் நிதேஷ் ரானே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னதாக தானேவில் உள்ள கடையின் உரிமையாளர், மராத்தியில் பேசவில்லை எனக்கூறி மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
இதனைக் கண்டித்து தானேவில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் நிதேஷ் ரானே, நடிகர்கள் ஜாவேத் அக்தரும், அமிர் கானும் மராத்தியில் பேசுகிறார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
ஆனால், மராத்தி பேசாததற்காக ஒரு ஏழை இந்து தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.