ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகம் சார்பில் 3 நாள் நடைபெறும் மாநாட்டை டெல்லியில் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் பாதுகாப்பிற்கான பட்ஜெட் உலகின் பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் என்றார்.
இந்தியாவின் ராணுவ தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.