கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே நோய் குணமாகத் தனிமையில் ஜெபம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.
தக்கலையை சேர்ந்த பெண்ணுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக 2 மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, உறவினர்கள் கூறியதன்பேரில் பாண்டிவிளை பகுதியில் உள்ள திருச்சபைக்குச் சென்றுள்ளார். அங்கு மதபோதராக உள்ள ரெஜிமோன் என்பவர் நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்ய வேண்டும் எனக்கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து தப்பி வந்த பெண் அளித்த புகாரின்பேரில், மதபோதகர் ரெஜிமோனை போலீசார் கைது செய்தனர்.