ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்டவிரோதமானது என அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு போட்டியாக அன்புமணி தலைமையில் சென்னையில் தலைமை குழு கூட்டம் நடைபெற்றது. இதில், வடிவேல் ராவணன், திலகபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ராமதாஸின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, அன்புமணி, வடிவேல் இராவணன் ஆகியோர் பங்கேற்காமல் அரசியல் தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு என்ற பெயர்களில் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் சட்ட விதிகள் மற்றும் சட்டத்திற்கும் முரணானவை என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அன்புமணியின் செயல்பாடுகளுக்கு துணை நின்று அவரது கரங்களை வலுப்படுத்த உறுதி ஏற்பதாகவும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்து வரும் 20-ம் தேதி போராட்டம் நடைபெறும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன….