கேரளாவில் செம்பங்குளம் படகுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆலப்புழா மாவட்டம் செம்பக்குளத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம், மூல நட்சத்திரத்தில் படகுப் போட்டி நடைபெறுகிறது.
அம்பலப்புழா நகரில் உள்ள கோயிலில் கிருஷ்ணன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை நினைவு கூறும் விதமாக 400 ஆண்டுகளாக இந்தப் படகுப் போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினம், மூல நட்சத்திரத்தையொட்டி நூறு அடி நீளமுள்ள படகுகள் நீரில் சீறிப் பாய்ந்து சென்றன.
நூற்றுக்கணக்கோனோர் ஒரே நேரத்தில் துடுப்புகள் போட்டுச் செலுத்தியதும், நீரின் மீது பாம்புப் படகுகள் நீந்திச் சென்றது பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.