ஆந்திர மாநிலம் எலுருவில், மரச்சாமான்கள் மற்றும் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
எலுருவில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகேயுள்ள மெத்தை தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் வெடிச்சத்தத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இந்த விபத்தில், ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மரச்சாமான்கள், மெத்தைகள் தீயில் கருகிச் சேதமடைந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.