அதிமுகவால்தான் மதிமுகவிற்கு அங்கீகாரம் கிடைத்தது என்பதை வைகோ மறந்துவிடக் கூடாதென, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள அழகு முத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது, பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்றும், சட்டம் ஒழுங்கை சீர்செய்ய வேண்டிய தி.மு.க அரசு. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை கூட சரியாக ஒருங்கிணைக்கவில்லை என தெரிவித்தார்.
அதிமுகவால் தான் (ம.தி.மு.க) அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதையெல்லாம் மறந்துவிட்டு வாய் கூசாமல் ஒரு கட்சியை இழிவுபடுத்தி பேசுவது வைகோவின் பண்புக்கு நல்லதல்ல.திமுகவை பற்றி வைகோ பேசாத பேச்சில்லை, வைக்காத விமர்சனம் இல்லை என்றும் சாடினார்.