ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
25 வயதான ராதிகா யாதவ் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார்.
இந்நிலையில் ராதிகா யாதவை அவரது தந்தை வீட்டில் வைத்துச் சுட்டுக் கொன்றுள்ளார். ராதிகா அடிக்கடி ரீல்ஸ் எடுத்து வந்ததாகவும், அதற்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ராதிகாவை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.