ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் சன்னி மன்சார் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணை தங்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதாக, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைப் போக்கும் விதத்தில் அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நபார்டு நிதி உதவியுடன் சன்னி-மன்சார் நீர்ப்பிடிப்பு திட்டத்தின்கீழ், குறைந்த செலவில் சிறிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
இதனால் தங்கள் கிராமத்தில் தண்ணீர் தேவை பெருமளவில் பூர்த்தி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.