அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனம் நிறைவடையும் வகையில் மகளிர் உரிமைத்தொகை தரப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியில் உரையாற்றிய அவர், பெண்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது என சட்டமன்றம் மற்றும் பொதுக்கூட்டத்தில் அதிமுக வலியுறுத்தியுள்ளதால் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் ஏமாற்ற பார்த்ததாகவும் ஆனால் அதிமுக விடவில்லை என்றும் அவர் கூறினார்.
தேர்தல் வருவதால் விடுபட்ட 30 லட்சம் பேருக்கு மகளிர் உதவித்தொகை அளிக்கப்படும் என திமுக அரசு தெரிவிப்பதாகவும், ஆனால் 8 மாசத்தில் எப்படி கொடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.