சென்னையில் மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.
சென்னை பெரம்பூர் ICF வளாகத்தில் 16-வது ‘ரோஜ்கர் மேளா’ நிகழ்ச்சியின் மூலம் தேர்வான பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகப் பங்கேற்றுப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அதன்படி, சென்னையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு மத்திய ரயில்வே துறை, நிதித்துறை, அஞ்சல் மற்றும் வருவாய்த் துறை ஆகிய பணியிடங்களுக்காக 249 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி புதிய இளைஞர்களுக்கு, புதிய பாரதத்தில், மத்திய அரசு சார்பில், ஒரே ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நாட்டை கட்டமைக்க, தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, 2047 ல் வல்லரசு நாடாக மாற்ற எடுக்கப்படும் முயற்சி என்றார். மேலும், வரும் 6 மாத காலங்களில் புல்லட் ரயில் பயணம் சாத்தியமாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.