டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த பீல்டர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஜோரூட் படைத்துள்ளார்.
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஆவது டெஸ்டில் கருண் நாயர் அடித்த பந்தை கேட்ச் பிடித்து ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன் மூலம் அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 211 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 210 கேட்ச்களுடன் ராகுல் டிராவிட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.