வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய கபில்தேவின் சாதனையைப் பும்ரா முறியடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்டில் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாகக் கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்த நிலையில், பும்ரா 13 முறை 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.