வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிபில், 30 ஆண்டுகளாக நேர்மையுடன் பணியாற்றி வந்த சத்துணவு அமைப்பாளர் பாரிஜாதம் திமுகவின் நிர்வாக திறமையின்மையால் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
தனது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளின் பெயர்களை சத்துணவு அமைப்பாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன்,
ஆதாரங்களும், மரண வாக்குமூலமும் கண்முன்னே இருக்கும் இந்த வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் செய்யும் தவறை லாவகமாக மூடி மறைப்பது திமுக அரசுக்கு கைவந்த கலை என விமர்சித்துள்ள அவர்,
சத்துணவு அமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.