அனைத்திற்குமே நீதிமன்றத்தை நாடவேண்டும் என்றால் திமுக ஆட்சி அமைத்தது ஏன்? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்களுக்கு நீதி கேட்டு சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் காவல் மரணங்களில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினரிடம் ஏன் சாரி கேட்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
லாக்கப் மரணத்தில் உயிரிழந்த 24 பேரின் கும்பங்களுக்கும் முதலமைச்சர் நிதி வழங்கிட வேண்டும், திராவிட மாடல் சர்க்கார் தற்போது “சாரி மா” சர்க்காராக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை அவமானம் என தெரிவித்தவர் ஸ்டாலின் என்றும், அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்ட சம்பவம் ஸ்டாலினுக்கு அவமானமாக இல்லையா? என்றும் வினவினார்.