சென்னை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகளால் பெண் ஒருவர் அதிருப்தியடைந்து வெளியேறினார்.
சென்னை அடுத்த கோவூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் திமுக எம்.பி., டிஆர் பாலு தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் ருக்மணி என்பவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்காக வந்திருந்தார்.
அங்கிருந்த அதிகாரிகள் அவரிடம் அலட்சியமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த அவர், முகாமிலிருந்து விரக்தியுடன் வெளியேறினர்.